கமலை வம்புக்கு இழுத்த பாஜக தலைவர் அண்ணாமலை..!!
கமலை வம்புக்கு இழுத்த பாஜக தலைவர் அண்ணாமலை..!!

சென்னை தியாகராய நகர் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்,
சென்னையில் மட்டும் தேர்தலின்போது 40 வாக்குச்சாவடி வரை திமுகவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் நடத்திய அராஜகங்களை மாநில தேர்தல் ஆணையம் கண்மூடிக் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்றும் இவற்றை திசைதிருப்ப மேலூரில் பாஜக பூத் ஏஜெண்ட் மீது ஹிஜாப் குற்றச்சாட்டு கூறியுள்ளனர் என குற்றம்சாட்டினார்.
மேலும் சட்டமன்ற தேர்தலை ஒப்பிட்டு பார்க்கும்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் 14 சதவீதமாக குறைந்தற்கு முழுமையான காரணம் ஆளும் கட்சியின் அட்டூழியம் மட்டுமே என தெரிவித்தார்.
அராஜகம் செய்த திமுக அதிகாரத்திற்கு வரக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது என கூறிய அவர், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான பிறகு எங்களது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார்.
மேலும் கண்துடைப்பிற்காகவே இன்று சில வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடக்கிறது என கூறினார்.
அதேபோல் ஜாதி மத அரசியலை பாஜக செய்கிறது என்ற கமலின் கருத்துக்கு பதில் கூறிய அண்ணாமலை, கமல் விக்ரம் படத்தில் நடிப்பதா, பிக்பாஸில் நடிப்பதா என குழம்பத்தில் இருக்கிறார் என்றும் கமல் சீரியஸ் அரசியல்வாதியான பிறகு அவரது கேள்விகளுக்கு பதில் கூறுவேன் என தெரிவித்தார்.

