Theme Check

பாஜக கூட்டம், காக்கா கூட்டம் – செல்லூர் ராஜூ அதிரடி!!

பாஜக கூட்டம், காக்கா கூட்டம் – செல்லூர் ராஜூ அதிரடி!!

பாஜக கூட்டம், காக்கா கூட்டம் – செல்லூர் ராஜூ அதிரடி!!
X

பாஜகவுக்கு சேரும் கூட்டம் காக்கா கூட்டம் என்றும், பதவிக்கு ஆசைப்பட்டு அண்ணாமலை அரசியல் செய்து கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ளதால் திமுக அமைச்சர்கள் குறித்த ஊழல் தொடர்பான விபரங்கள் கிடைக்கலாம், அதனடிப்படையில் அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை சொல்கிறார் என்றார்.

திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது என்பதை அதிமுக நெடுங்காலமாக சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக தான் எதிர்கட்சி. திமுக அரசின் குற்றங்களை அதிமுக தான் அதிகமாக சுட்டிக் காட்டிக்கொண்டு இருக்கிறது என்று கூறினார்.

annamali

சட்டசபையில் அதிமுக பேசும் பல பேச்சுக்கள் வெளியே வருவதில்லை. சினிமாவில் ஒரு சென்சார் போர்டு இருப்பது போல சட்டசபைக்கும் ஒரு சென்சார் போர்டு உள்ளது என்று செல்லூர் ராஜூ விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவை வளர்ப்பதற்காக அண்ணாமலை அரசியல் செய்கிறார். தமிழிசைக்கு கவர்னர் பதவி கிடைத்தது போல, எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது போல அண்ணாமலையும் தனக்கு ஏதாவது பதவி கிடைக்கும் என ஆசைப்பட்டு ஏதோ அரசியல் செய்கிறார் என்று விமர்சித்தார்.

Sellur-Raju

கூட்டம் திரட்டுவது எல்லாம் பெரிய விஷயமே அல்ல. பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம்; அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம். தனித்த நிற்க அதிமுக தயாராக உள்ளது. யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்ல .பி.எஸ், .பி.எஸ் தயார் என்றார்.

நாளைக்கே தேர்தல் வைத்துக் கொள்ளலாம்.எல்லா கட்சியும் தனித்தே போட்டி இடுவோம். அதிமுக தயார், மற்ற கட்சியினர் தயாரா, இது அதிமுகவின் கருத்து. எங்கள் மேல் யாரும் துரும்பை வீசினால், பதிலுக்கு நாங்கள் தூணை கொண்டு எறிவோம் என்று கூறினார்.

newstm.in

Next Story
Share it