தேர்தலில் போட்டியிட ஆள் கிடைக்காத பாஜக! ஓட்டே இல்லாதவருக்கு சீட்!!
தேர்தலில் போட்டியிட ஆள் கிடைக்காத பாஜக! ஓட்டே இல்லாதவருக்கு சீட்!!

ஆள் இல்லாததால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாரை நிற்க வைப்பது என்று தெரியாத தமிழக பாஜக ஓட்டே இல்லாதவருக்கு சீட் கொடுத்த சோகம் நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி நடக்கிறது. விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகளுக்கு 308 பேர், திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகளுக்கு 238 பேர், கோட்டக்குப்பத்தில் 27 வார்டுகளுக்கு 161 பேர் என மொத்தம் நகராட்சி வார்டுகள் 102 பதவிகளுக்கு 707 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் நகராட்சி 4ஆவது வார்டில் பா.ஜ.கவை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி பவானி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பவானி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
பா.ஜ.க சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பவானிக்கு விழுப்புரம் நகராட்சியின் எந்த வார்டிலும் வாக்கு இல்லை என்றும், புதுச்சேரியில் அவருக்கு வாக்கு உள்ளதாலும் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

