குமரி தேரோட்டத்தில் சலசலப்பு..!
குமரி தேரோட்டத்தில் சலசலப்பு..!

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் உள்ள குமாரகோவில் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதில் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அப்போது, ‘அமைச்சர் மனோ தங்கராஜ் இறை நம்பிக்கை இல்லாதவர்; அதனால், அவர் குமாரகோவில் தேரை வடம் தொட்டு இழுக்க கூடாது’ என்று பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
Next Story

