Theme Check

#BREAKING:- ஜூலை 15 முதல் மாதம் 1000 ரூபாய்.. வெளியானது தகவல்..!

#BREAKING:- ஜூலை 15 முதல் மாதம் 1000 ரூபாய்.. வெளியானது தகவல்..!

#BREAKING:- ஜூலை 15 முதல் மாதம் 1000 ரூபாய்.. வெளியானது தகவல்..!
X

திமுக அரசு பதவியேற்று கடந்த 7-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. அன்றைய சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிவிப்புகளில் ஒன்றாக அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர் கல்வி படிக்கக்கூடிய மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும்” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 அன்று இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கக்கூடிய அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் இந்த உதவித்தொகை கிடைக்கும்.

மேலும், இந்தத் திட்டம் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள் என்றும் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it