#BREAKING:- ஜூலை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..!!
#BREAKING:- ஜூலை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..!!

பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை ஏற்கெனவே அமலில் உள்ளது. இதனால் பெரும்பாலான ஹோட்டல்களில் இன்றுவரையும் பாலிதீன் பை வழங்கப்படுவதில்லை. இந்த பிளாஸ்டிக் உபயோகத்தினால் சுற்றுசூழல் மிகவும் மாசடைந்துள்ளது. கால்நடைகள் பிளாஸ்டிக் பொருட்களை உண்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இறப்பை சந்திக்கின்றன. பிளாஸ்டிக் பொருட்களால், மழை நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. கழிவு நீர் பாதைகளும், நிலத்தடி நீரும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021 ஆகஸ்டு மாதம் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை ஜூலை 1-ந்தேதி முதல் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
உதாரணமாக பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ் கிரீம் கப்புகள், ஸ்டிரா, ஸ்பூன் போன்றவையும் இந்த தடையில் அடங்கும். இவை தவிர, பத்திரிகைகள், சிகரெட் அட்டைகள், 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பி.வி.சி. பேனர்கள் ஆகியவையும் அடங்கும்..

ஜூலை 1-ந்தேதி அமலுக்கு வரும் உத்தரவுக்கு முன்னதாக அதாவது ஜூன் 30-ந் தேதிக்குள் மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் வணிகர்கள், சிறு கடைகள், ஷாப்பிங் மால்கள், சினிமா அரங்குகளில் உள்ள விற்பனை கூடங்கள் என அனைத்து வணிகர்களும் அதன் இருப்பை பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் 30-ந்தேதிக்கு பிறகு மேற்கண்ட பொருள்களை கையிருப்பு வைத்து இருந்தாலோ வினியோகம் செய்தாலோ சோதனை செய்யும்போது பிடிபட்டால் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் சீல் வைக்கப்பட்டு கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

