Theme Check

#BREAKING: பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் பகவந்த் மான்..!

#BREAKING: பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் பகவந்த் மான்..!

#BREAKING: பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் பகவந்த் மான்..!
X

இந்தியாவின் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில், பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில், 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. பஞ்சாப்பின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வெற்றி பெற்றார்.
Image
இதையடுத்து, தேர்தல் வெற்றி குறித்து பகவந்த் மான் கூறுகையில், பகத்சிங்கின் கிராமமான கட்கர்காலனில் நான் முதல்வராக பதவியேற்பேன்; ராஜ்பவனில் அல்ல.

பஞ்சாப்பின் எந்த அரசு அலுவலகங்களிலும் முதல்வரின் புகைப்படங்கள் இருக்காது; பகத்சிங் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் படங்கள் மட்டுமே இருக்கும் என தெரிவித்து இருந்தார்.
Image
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் தற்போது பதவியேற்றுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. பகவந்த் மானுக்கு, பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Next Story
Share it