Theme Check

#BREAKING:- ஜாதி ரீதியாக பேசிய பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்..!!

#BREAKING:- ஜாதி ரீதியாக பேசிய பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்..!!

#BREAKING:- ஜாதி ரீதியாக பேசிய பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்..!!
X

விளாத்திகுளம், குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவரிடம் ஆசிரியை கலைச்செல்வி சாதி ரீதியாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொறுப்பு குறிப்பிட்ட சாதியினருக்கு செல்லக்கூடாது என ஆசிரியை கலைச்செல்வி பள்ளியில் படிக்கும் மாணவரிடம் பேசி உள்ளார். குறிப்பிட்ட ஜாதியினர் பதவிகளுக்கு வந்துவிட கூடாது. அதனால் உன்னுடைய ஜாதியை சேர்ந்த ஊர் காரர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வா என்று அந்த மாணவரை ஆசிரியர் தூண்டும் விதமாக பேசி இருக்கிறார்.

இந்த ஆடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவியது. சாதி ரீதியாக பேசிய ஆசிரியை கலைச்செல்வி மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவரிடம் சாதி ரீதியாக பேசிய குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆசிரியைகள் கலைச்செல்வி, மீனா ஆகியோரைமுதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பணியிடை நீக்கம் செய்தார்.

Next Story
Share it