#BREAKING:- பிரபல தமிழ் நடிகர் காலமானார்..!!
#BREAKING:- பிரபல தமிழ் நடிகர் காலமானார்..!!

பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் இன்று காலமானார். இவருக்கு வயது 70.
தமிழ் சினிமாவில் வலுவான கதாபாத்திரத்திலும், வசனங்களாலும் வில்லனாக நடித்துள்ளார் சலீம் கவுஸ்.இவர் தமிழ் சினிமாவில் வெற்றிவேல் படத்தின் மூலம் ஜிந்தா கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே அட்டகாசமான நடிப்பாலும், வித்தியாசமான சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தார். அதேபோல் சின்ன கவுண்டர் படத்திலும் சக்கரை கவுண்டர் ஆக நடித்து அசத்தியிருந்தார்.

சலீம் கவுஸ் கமலுடன் வெற்றி விழா, கார்த்திக்குடன் சீமான், சத்யராஜுடன் மகுடம், பிரபுவுடன் தர்மசீலன், பிரசாந்துடன் திருடா திருடா, சரத்குமாருடன் சாணக்கியா, அஜித்துடன் ரெட், விஜய்யுடன் வேட்டைக்காரன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் இன்று காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

