Theme Check

BREAKING: மாநிலங்களவை எம்.பி.யாக இளையராஜா நியமனம் !!

BREAKING: மாநிலங்களவை எம்.பி.யாக இளையராஜா நியமனம் !!

BREAKING: மாநிலங்களவை எம்.பி.யாக இளையராஜா நியமனம் !!
X

இசையமைப்பாளர் இளையராஜா நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியமன எம்பியாக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இளையராஜா நியமிக்கப்பட்டதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு இளையராஜா அறிமுகமானார்.

dsf

இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2018-ஆம் ஆண்டு இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.

இளையராஜா, போன்று பிரபல தடகள வீராங்கனையான பி.டி.உஷாவும் நியமன எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரையும் நியமன எம்பியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்கள்.

newstm.in

Next Story
Share it