BREAKING: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது !!
BREAKING: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது !!

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது 250 சீனாகாரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விசாக்களில்தான் முறைகேடு அரங்கேறி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாகவே ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

250 சீனாகாரர்களுக்கும் சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். கார்த்தி சிதம்பரம் மீது புதிதாக வழக்கு போடப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தனது சொந்த வேலைகள் காரணமாக கார்த்தி சிதம்பரம் லண்டன் புறப்பட்டு சென்றிருந்தார். இந்த நிலையில்தான் அவர் மீது வழக்கு போடப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் அரங்கிலும் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ கைது செய்தது.

