BREAKING: இலங்கையில் ராஜபக்சே கட்சி அலுவலகம் தீ வைத்து எரிப்பு !!

BREAKING: இலங்கையில் ராஜபக்சே கட்சி அலுவலகம் தீ வைத்து எரிப்பு !!

BREAKING: இலங்கையில் ராஜபக்சே கட்சி அலுவலகம் தீ வைத்து எரிப்பு !!
X

கொழும்பில் உள்ள ராஜபக்சே கட்சி அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது இன்று காலை பிரதமர் ராஜபக்சே ஆதரவாளர்கள் கடும் தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது.

as

இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகியுள்ளார். கொழும்பில் உள்ள ராஜபக்சே கட்சி அலுவலகத்துக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து எரித்தனர் . சொந்த ஊரில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியதாக ராஜபக்சே மீது குற்றசாட்டு வைத்துள்ளனர். ராஜபக்சே ஆதரவு குண்டர்களை மரத்தில் கட்டிவைத்து போராட்டக்காரர்கள் அடித்து உதைத்தனர்.

இந்தசம்பவத்துக்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, காலேமுகத்திடலில் ராஜபக்சே பதவி விலகலை வரவேற்று கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.

voilance

இதனால் அங்கு போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்ட இலங்கை ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொரலாவை பொதுமக்கள் அடித்தே கொன்றதாகவும், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இருப்பினும் அதிபர் கோட்டாபய ராஜபக்சவும் பதவி விலக வலியுறுத்தி கொழும்புவில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it