Theme Check

#BREAKING:- பள்ளிகள் திறக்கும் தேதி.. அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!

#BREAKING:- பள்ளிகள் திறக்கும் தேதி.. அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!

#BREAKING:- பள்ளிகள் திறக்கும் தேதி.. அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!
X

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

2022 - 2023-ம் கல்வி ஆண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கும். மார்ச் 14- ம் தேதி 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும். ஏப்ரல் 3-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும்.

வரும் கல்வியாண்டில் கொரோனா கால அட்டவணை போல் இல்லாமல் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும். வரும் கல்வி ஆண்டு முதல் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்.

நீட் தேர்வுக்கு இனி தனியே பயிற்சி வழங்கப்பட மாட்டாது; பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Next Story
Share it