Theme Check

#BREAKING அனைத்து மக்களும் ஷாக்.. மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை !!

#BREAKING அனைத்து மக்களும் ஷாக்.. மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை !!

#BREAKING அனைத்து மக்களும் ஷாக்.. மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை !!
X

தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் ஏற்றத்துடனே தொடங்கிய நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று (ஏப்ரல் 14) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,006 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,996 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 39,968 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 40,048 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

gold

தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 5,395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,405 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 43,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 43,240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,918 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,918 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,918 ஆகவும், கேரளாவில் ரூ.4,938 ஆகவும், டெல்லியில் ரூ.4,918 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,918 ஆகவும், ஒசூரில் ரூ.4,992 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,992 ஆகவும் இருக்கிறது.

gold

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.74.20 ஆக இருந்தது. இன்று அது ரூ.74.40 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 74,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in


Next Story
Share it