#BREAKING:- வேலை நிறுத்த போராட்டம்.. பஸ்சுக்கு காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து மரணம்..!
#BREAKING:- வேலை நிறுத்த போராட்டம்.. பஸ்சுக்கு காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து மரணம்..!

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பேருந்து நிலையத்தில் பெருமளவில் பயணிகள் காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், நெல்லை அருகே பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி அடுத்த கீழக்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியநாராயணன் (65). இவர், இன்று காலை கொண்டாநகரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
நீண்ட நேரம் காத்துநின்ற அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

