#BREAKING: வாக்குச் சாவடியில் பரபரப்பு.. அரை நிர்வாணமாக வந்த நபர்.. ஏன் தெரியுமா..?
#BREAKING: வாக்குச் சாவடியில் பரபரப்பு.. அரை நிர்வாணமாக வந்த நபர்.. ஏன் தெரியுமா..?

தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (19ம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தின் 12-வது வார்டுக்கான வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க வந்த மகேஷ்குமார் என்பவர் அரை நிர்வாணமாக வந்ததால் காவல்துறையினர் அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.
நகை மதிப்பீட்டாளர் மற்றும் மாநில நகை மதிப்பீட்டாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ள இவர், தன்னை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரை நிர்வாணமாக வந்ததாகக் கூறியுள்ளார்.
அத்துடன், இவர் கையில் ஏந்தி வந்த பதாகையில், “வங்கிகள், தங்க நகை கடன் மூலம் அதிக லாபம் ஈட்டுகிறது” என குறிப்பிட்டிருந்தார்.
நகை மதிப்பீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் மகேஷ் குமார், தனது கோரிக்கையை வலியுறுத்தி அரை நிர்வாணமாக வாக்களிக்க வந்ததால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.

