#BREAKING:- வைகோ மகன் துரை வையாபுரிக்கு மதிமுகவில் முக்கிய பொறுப்பு..!
#BREAKING:- வைகோ மகன் துரை வையாபுரிக்கு மதிமுகவில் முக்கிய பொறுப்பு..!

சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக, வைகோவின் மகன் துரை வையாபுரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில், 3 மாவட்டச் செயலாளர்கள் மதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன், மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என குரல் எழுப்பினர்.
இந்த சூழலில், மதிமுக பொதுக்குழு கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் சென்னை அண்ணா நகரில் இன்று கூடியது. இதில், அதிருப்தி மாவட்டச் செயலாளர்கள் 3 பேரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
இந்தக் கூட்டத்தில், உட்கட்சி பிரச்னைகளுக்கு பொதுக்குழு கூட்டத்தில் தீர்வு காண்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு முழு அதிகாரம் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து, மதிமுக தலைமைக் கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வையாபுரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

