#BREAKING: துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணைய பதவிக்காலம் மே 25 வரை நீட்டிப்பு..!
#BREAKING: துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணைய பதவிக்காலம் மே 25 வரை நீட்டிப்பு..!

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி போராட்டங்கள் நடைபெற்றன.
போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை கடந்த 18-ம் தேதியுடன் நிறைவடைந்தது. விசாரணையின் அறிக்கை 3 மாதங்களுக்குள் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது மே 25-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

