Theme Check

BREAKING: மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா

BREAKING: மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா

BREAKING: மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா
X

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக முக்தார் அப்பாஸ் நக்வி இருந்துவந்தார். இவரது மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். பிகார் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு முக்தார் அப்பாஸ் நக்வி தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இதனிடையே, முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

newstm.in

Tags:
Next Story
Share it