Theme Check

#BREAKING: வெற்றிக்கனியை தட்டிப்பறித்தது விஜய் மக்கள் இயக்கம்..!

#BREAKING: வெற்றிக்கனியை தட்டிப்பறித்தது விஜய் மக்கள் இயக்கம்..!

#BREAKING: வெற்றிக்கனியை தட்டிப்பறித்தது விஜய் மக்கள் இயக்கம்..!
X

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் முதன் முதலில் தேர்தல் களம் கண்ட விஜய் மக்கள் இயக்கம் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை நகராட்சியில் 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பர்வேஸ் 282 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
Next Story
Share it