வாய்க்காலில் வீசி பச்சிளம் குழந்தை கொலை.. பாசக்கார தாய்க்கு போலீஸ் காப்பு..!
வாய்க்காலில் வீசி பச்சிளம் குழந்தை கொலை.. பாசக்கார தாய்க்கு போலீஸ் காப்பு..!

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அத்திப்படுகை கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகில் கழிவுநீர் வாய்க்காலில் தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கடந்த 29-ம் தேதி பிணமாக கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த திருநள்ளாறு போலீசார் அங்கு சென்று, பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறந்து அரை மணி நேரத்தில் இந்த குழந்தை வாய்க்காலில் வீசப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பச்சிளம் குழந்தையை வாய்க்காலில் வீசியது யார்..? என விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ரேணுகா (35) என்ற பெண் தவறான முறையில் கர்ப்பம் அடைந்ததால், சுடுகாடு அருகே யாருடைய உதவியும் இன்றி, தானே குழந்தையை பிரசவித்து, அதை வாய்க்காலில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ரேணுகாவை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.
Next Story

