Theme Check

மத்திய அமைச்சரின் மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!!

மத்திய அமைச்சரின் மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!!

மத்திய அமைச்சரின் மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!!
X

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு பிணை வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஆஷிஷ் மிஸ்ராவின் பிணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த்மற்றும் நீதிபதி ஹிமா கோலி ஆகியோரின் அமர்வு விசாரித்தது.

ashish-mishra 1

அலகாபாத் நீதிமன்றம் பொருத்தமில்லா காரணங்களை காட்டி இந்த பிணையை அவசர கதியில் வழங்கியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றம் வழங்கிய பிணையை எதிர்த்து உத்தரப் பிரதேச அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலானாய்வு குழு அறிவுறுத்தியுள்ளது.

ashish-mishra 1

ஆனால் அதை உத்தரப் பிரதேச அரசு செய்யாதது ஏன் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்தில் சரணடைய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் மீண்டும் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it