Theme Check

பான் கார்டு மோசடி… பணத்தை அபேஸ் செய்யும் கும்பல்!!

பான் கார்டு மோசடி… பணத்தை அபேஸ் செய்யும் கும்பல்!!

பான் கார்டு மோசடி… பணத்தை அபேஸ் செய்யும் கும்பல்!!
X

கடன் வாங்குவதும் சுலபம். வங்கிக் கிளையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. ஒரு கிளிக் செய்தாலே உடனடியாக சில நிமிடங்களில் வங்கிக் கணக்கில் பணம் வந்துவிடும்.

இந்தியாவில் இப்போது இன்ஸ்டண்ட் லோன் எனப்படும் உடனடிக் கடன்கள் பிரபலமாக உள்ளன. பணத் தேவை உள்ளவர்கள் இதுபோன்ற உடனடிக் கடன்களுக்கு அதிகமாக முயற்சிக்கின்றனர். இதற்காகவே நிறைய மொபைல் ஆப்கள் இப்போது வந்துவிட்டன.

இந்த மொபைல் ஆப்கள் அதிகாரப்பூர்வமானதுதானா என்றுகூடப் பார்க்காமல் நிறையப் பேர் அதன் மூலம் கடன் வாங்குகின்றனர். இதில் பெரிய பிரச்னை இருப்பது பெரும்பாலும் தெரிவதில்லை. பிரச்னை வந்தபிறகுதான் உண்மை நிலவரம் தெரியவரும்.

cyber-crime 1

சமீபத்தில் 'தானி' என்ற மொபைல் ஆப் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதன் மூலம் கடன் வாங்கிய நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் பான் கார்டு விவரங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சன்னி லியோன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது பான் கார்டை வைத்து வேறு யாரோ கடன் வாங்கியுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் பரபரப்பை கிளப்பினர். இதுபோன்ற மொபைல் ஆப்கள் மீது இப்போது மக்களுக்கு அச்சம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

pan

கடன் வாங்குவதற்காக மட்டுமல்லாமல், சிபில் ஸ்கோர் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் பல்வேறு வெப்சைட்களிலும் முன்பின் தெரியாத மொபைல் ஆப்களிலும் மக்கள் தங்களுடைய பான் கார்டு, மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்கின்றனர். இது பின்னாட்களில் அவர்களுக்கே பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடுகிறது.

இதுபோன்ற ஆப்களைப் பயன்படுத்தும்போது கவனமுடன் இருக்குமாறு ரிசர்வ் வங்கியும் மற்ற வங்கிகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. அதனால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

newstm.in

Next Story
Share it