‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு தடை.. முதல்வருக்கு தமுமுக தலைவர் கடிதம்..!
‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு தடை.. முதல்வருக்கு தமுமுக தலைவர் கடிதம்..!

‘பீஸ்ட்’ திரைப்படத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைய வாய்ப்பு உள்ளது. எனவே, ‘பீஸ்ட்’ திரைப்படத்துக்கு தடைவிதிக்கக்கோரி தமிழக முதல்வருக்கு தமுமுக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இதில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
அத்துடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ‘பீஸ்ட்’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் ‘பீஸ்ட்’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. குவைத், கத்தார் போன்ற நாடுகளில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘பீஸ்ட்’ திரைப்படத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைய வாய்ப்புள்ளது. எனவே, ‘பீஸ்ட்’ படத்திற்கு தடைவிதிப்பதோடு மட்டுமல்லாமல், வெறுப்பு அரசியலை தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.

