Theme Check

இந்த விளம்பரங்களுக்கு தடை!! ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

இந்த விளம்பரங்களுக்கு தடை!! ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

இந்த விளம்பரங்களுக்கு தடை!! ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
X

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச் சட்டத்தை உருவாக்கச் சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Rummy

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டம், பெட்டிங் உள்ளிட்டவை தொடர்பான எந்த ஒரு விளம்பரத்தையும் ஒளிபரப்பக் கூடாது என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், சமூக-பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தையும், இளைஞர்கள், குழந்தைகளிடையே எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சூதாட்ட விளம்பரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, இதுபோன்று மக்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் சூதாட்டம், பெட்டிங் போன்ற விளம்பரங்களைக் காட்சி ஊடகங்கள், செய்தித்தாள்கள், செய்தி நிறுவனங்கள் ஒளிபரப்பவோ, விளம்பரப்படுத்தவோ கூடாது என உத்தரவிட்டுள்ளது.

Banned

மேலும், சமூக ஊடகங்கள், சமூக வலைத்தளங்களும் பொதுமக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரிக்கவோ வேண்டாம் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story
Share it