ஜூலையில் வங்கிகள் 15 நாட்களுக்கு விடுமுறை..!!
ஜூலையில் வங்கிகள் 15 நாட்களுக்கு விடுமுறை..!!

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது.
அதன்படி, வரும் ஜூலை மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்துவதில்லை. மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் இந்த விடுமுறை நாட்கள் மாறுபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான தங்கள் பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாத வங்கி விடுமுறை பட்டியல்:
ஜூலை 1, 2022 - வெள்ளிக்கிழமை - ரத யாத்திரை - ஒடிசா
ஜூலை 3, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 5, 2022 - செவ்வாய் - குரு ஹர்கோவிந்த் பிறந்தநாள் - ஜம்மு மற்றும் காஷ்மீர்
ஜூலை 6, 2022 - புதன் - MHIP நாள் - மிசோரம்
ஜூலை 7, 2022 - வியாழன் - கர்ச்சி பூஜை - திரிபுரா
ஜூலை 9, 2022 - சனிக்கிழமை - ஈத்-உல்-அதா - அனைத்து மாநிலங்களும்
ஜூலை 10, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 11, 2022 - திங்கள் - ஈத்-உல்-அசா - அனைத்து மாநிலங்களும்

ஜூலை 13, 2022 - புதன் - தியாகிகள் தினம் - ஜம்மு மற்றும் காஷ்மீர்
ஜூலை 13, 2022 - புதன் - பானு ஜெயந்தி - சிக்கிம்
ஜூலை 14, 2022 - வியாழன் - பென் டீன் கலாம் - மேகாலயா
ஜூலை 16, 2022 - சனிக்கிழமை - ஹரேலா - உத்தரகாண்ட்
ஜூலை 17, 2022 - ஞாயிறு-யு டிரோட் சிங் டே - மேகாலயா
ஜூலை 24, 2022 - ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 26, 2021 - செவ்வாய் - கேர் பூஜை - திரிபுரா
ஜூலை 31, 2022 - ஞாயிறு - ஹரியாலி தீஜ் - ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட்
ஜூலை 31, 2022 - ஞாயிறு - ஷஹீத் உதம் சிங்கின் தியாக தினம் - பஞ்சாப் மற்றும் ஹரியானா

