Theme Check

குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்.. மாணவி சோக முடிவு !

குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்.. மாணவி சோக முடிவு !

குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்.. மாணவி சோக முடிவு !
X

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் நடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள கிராமத்தில் 21 வயது இளம் பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தூக்கிட்டு தொங்கிய நிலையில் மாணவியின் உடலை கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். அக்கிராம மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

police

பின்னர் சம்பவ இடத்துக்குசென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதனிடையே, குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டுவதாக, தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தை மீட்டு அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் .

கடிதம் மற்றும் மாணவியின் செல்போனை கைபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. மாணவி குளிக்கும்போது வீடியோ எடுத்தது யார்? அதன்மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

police

இந்த கொடூரத்தில் தொடர்புடைய நபர் உள்ளூரைச் சேர்ந்தவரா? வெளியூர்காரரா எனவும் விசாரணை நடத்துகின்றனர். விரைவில் அந்நபர் பிடிபடுவார் என போலீசார் கூறுகின்றனர்.

newstm.in

Next Story
Share it