மர்ம சாமியாரோடு குளியல்… நாடு முழுவதும் வைரலாகும் சித்ரா ராமகிருஷ்ணா!!
மர்ம சாமியாரோடு குளியல்… நாடு முழுவதும் வைரலாகும் சித்ரா ராமகிருஷ்ணா!!

தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை சாமியாருடன் சேர்ந்து ஊழல் செய்திருப்பதாக செபி குற்றம் சாட்டியுள்ளது.
2013 முதல் 2016 வரை தேசியப் பங்குச் சந்தையின் செயல் அதிகாரியாகவும், அதன் நிர்வாக இயக்குநராகவும் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி பணியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், தேசியப் பங்குச் சந்தையின் வணிக திட்டங்கள், பங்குச் சந்தையின் ஏற்றம், இறக்கம் குறித்த கணிப்புகள், ரகசியங்கள் என பலவற்றையும் இமயமலை சாமியார் ஒருவருடன் சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்து கொண்டதாக செபி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் சாமியாரின் அறிவறுத்தலின் பெயரில் ஆனந்த சுப்ரமணியன் என்பவரை தேசியப் பங்குச் சந்தையின் தலைமை உத்தி அதிகாரி பொறுப்பில் சித்ரா ராமகிருஷ்ணா அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சித்ரா ராமகிருஷ்ணா தனது விளக்கத்தில் சாமியாரோடு மின்னஞ்சல் தொடர்பு மட்டும் இருந்ததாகவும், நேரில் சந்தித்தத்தில்லை என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அவர் கங்கைக் கரையில் அந்த சாமியாரை 20 வருடங்களுக்கு முன்பு சந்தித்திருப்பதையும், செஷல்ஸ் தீவில் அவரோடு கடலில் குளித்ததையும் மின்னஞ்சல் மூலம் செபி அம்பலப்படுத்தியிருக்கிறது.
விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரேனுக்கும், ஆனந்த் சுப்ரமணியனுக்கும் தலா ரூ.2 கோடியும் செபி அபராதம் விதித்தது.

சித்ரா பதவியில் இருந்த மூன்று ஆண்டு காலத்தில் பல நிறுவனங்கள் அவரது செயல்பாடு குறித்தும், ஆனந்த சுப்ரமணியன் குறித்தும் செபிக்கு புகார்கள் அளித்துள்ளன. ஆனாலும், குற்றச்சாட்டு தொடர்பாக செபி இப்போதுதான் புலனாய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆனந்த் சுப்ரமணியன் மனித உளவியலில் பரிச்சயம் கொண்டவர் என்றும், அவர்தான் இமயமலை சாமியாராக புனைந்து சித்ராவை தன் விருப்பப்படி ஆட்டி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
newstm.in

