உஷார்! நாளை முதல் இந்த மாவட்ட மக்களுக்கும் கட்டாயம்!!
உஷார்! நாளை முதல் இந்த மாவட்ட மக்களுக்கும் கட்டாயம்!!

நாளை முதல் தேனி மாவட்டத்தில் முகக் கவசம் கட்டாயம் என்றும், தவறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது.
இதனால் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்திலும் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் ரூ.500/- அபராதம்' விதிக்க தேனி ஆட்சியர் முரளீதரன் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, முகக்கவசம் அணிதல். சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட தமிழக அரசின் வழிக்காட்டு தெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
newstm.in

