பீஸ்ட் ஆடியோ லாஞ்ச் அப்டேட்… குஷியில் ரசிகர்கள்!!
பீஸ்ட் ஆடியோ லாஞ்ச் அப்டேட்… குஷியில் ரசிகர்கள்!!

விஜய்யின் பீஸ்ட் பட ஆடியோ லாஞ்ச் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியாகி ஹிட் ஆனது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரும் 20 ஆம் தேதி சென்னையில் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த ஆடியோ லாஞ்ச் லைவ் ஈவன்ட்டாக இருக்கும் என தெரிகிறது.

இதில் விஜய்யின் ரசிகர்கள் பங்கேற்பார்கள் என்றும் இதற்கான டோக்கன் மாநிலம் முழுவதும் உள்ள விஜய்யின் மக்கள் இயக்கம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆடியோ லாஞ்ச் குறித்த தகவல் வெளியாகியுள்ளதால் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
newstm.in

