Theme Check

எகிறியது ‘பீஸ்ட்’ டிக்கெட் ரேட்.. ஆத்திரத்தில் ரசிகர்கள் சாலை மறியல்..!

எகிறியது ‘பீஸ்ட்’ டிக்கெட் ரேட்.. ஆத்திரத்தில் ரசிகர்கள் சாலை மறியல்..!

எகிறியது ‘பீஸ்ட்’ டிக்கெட் ரேட்.. ஆத்திரத்தில் ரசிகர்கள் சாலை மறியல்..!
X

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13-ம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. அந்த வகையில், திருவள்ளூரில் உள்ள ஒரு திரையரங்கத்தில் வரும் 13-ம் தேதி ‘பீஸ்ட்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

இந்த நிலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட ரசிகர்கள், குறிப்பிட்ட திரையரங்கத்தில் அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் விலையை விட கூடுதலாக ரூ.1000 வைத்து கள்ளத்தனமாக டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், ரசிகர் மன்றத்துக்கு உரிய டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை எனக்கூறி, ஆவடி செல்லும் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார், ரசிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story
Share it