Theme Check

‘பீஸ்ட்’ இன்று வெளியாகாது.. தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

‘பீஸ்ட்’ இன்று வெளியாகாது.. தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

‘பீஸ்ட்’ இன்று வெளியாகாது.. தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
X

விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் திரைப்படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் இன்று (13-ம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியேட்டர்களில் வெளியாகாது என்று மாநகராட்சி தியேட்டர் உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர்.

திரையங்க உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பான பிரச்னையின் காரணமாக இந்த முடிவை கரூர் திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூர் மாநகராட்சிகளில் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகாது என்ற அறிவிப்பு, படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்த விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story
Share it