தமிழ் பட நடிகைக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.. ரசிகர்கள் வாழ்த்து !

தமிழ் பட நடிகைக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.. ரசிகர்கள் வாழ்த்து !

தமிழ் பட நடிகைக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.. ரசிகர்கள் வாழ்த்து !
X

தமிழில் கார்த்தி நடித்த சகுனி, சூர்யா நடித்த மாசு என்ற மாசிலாமணி, அருள்நிதி நடித்த உதயன், எனக்கு வாய்த்த அடிமைகள் உட்பட திரைப்படங்களில் நடித்தவர் பிரணிதா சுபாஷ். கன்னட நடிகையான இவர், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். எளிதாக நடித்து அசத்திய இவருக்கு பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர்.

Pranitha-Subhash

நடிகை பிரணிதா திரைப்படங்களில் நடிப்பதோடு பல்வேறு சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருபவர். அவர் கடைசியாக 'புஜ்: தி பிரைட் ஆப் இந்தியா' என்ற படத்தில் நடித்தார். அவர் நடிப்பில் வெளியான 'ஹங்கமா-2' படத்தில் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார்.

Pranitha-Subhash

இந்த நிலையில் இவர், கடந்த ஆண்டு நிதின் ராஜு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் திரைப்படங்களில் அவர் நடிக்கவில்லை. அதேநேரத்தில் தனது கணவரின் 34ஆவது பிறந்த நாளின் போது, தான் தாய்மை அடைந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் தனது கர்ப்ப கால புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது. தான் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை, தனது சமூக வலைதளப்பக்கத்தில் பிரணிதா பகிர்ந்துள்ளார்.

Pranitha-Subhashஅதில், மருத்துவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயஸ்ரீ, டாக்டர் சுனில் ஈஸ்வர் மற்றும் அவர் குழுவினரால் எனது பிரசவம் சீராக இருந்தது. முடிந்தவரை என் பிரசவ வலியைக் குறைத்த டாக்டர் சுப்பு, மற்றும் மயக்க மருந்து நிபுணர் உள்பட மருத்துவ குழுவினருக்கு நன்றி, என்று தெரிவித்துள்ளார்.

தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை பிரணிதாவுக்கு, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it