Theme Check

அழகிகள் அதிர்ச்சி.. விளம்பர மாடலாக மாறிய சாலையோர பலூன் விற்கும் சிறுமி !!

அழகிகள் அதிர்ச்சி.. விளம்பர மாடலாக மாறிய சாலையோர பலூன் விற்கும் சிறுமி !!

அழகிகள் அதிர்ச்சி.. விளம்பர மாடலாக மாறிய சாலையோர பலூன் விற்கும் சிறுமி !!
X

சாலையோரம் பலூன் விற்பனை செய்துவந்த சிறுமி தற்போது விளம்பர மாடலாக மாறி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பலூன் விற்பனை செய்துவந்த சிறுமியை எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை தொடர்ந்து பெரும் அழகிகளை புறம்தள்ளி அச்சிறுமி விளம்பர மாடலாக மாறியுள்ளார். இதனால் புகைப்படக் கலைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கேரளாவில் இச்சம்பவம் நடந்தாலும் இந்தியா முழுவதும் தற்போது அச்சிறுமி பிரபலமாகியுள்ளார்.

பலுன் விற்கும் சிறுமி ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கிஷ்பு ஆவார். கிஷ்பு தனது சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்ததால், குடும்ப பாரத்தை சுமர்ந்துகொண்டு கேரளத்தில் பலூன் விற்பனை செய்து தனது குடும்பத்திற்கு உதவியாக இருந்து வந்துள்ளார். கேரள மாநிலம் தலசேரி அடுத்த அண்டலூர் பகுதியில் உள்ள கோயிலில் கிஷ்பு என்ற சிறுமி பலூன் விற்பனை செய்து வந்துள்ளார்.

kerala_ballon_child

இந்நிலையில் கேரளத்தைச் சேர்ந்த அர்ஜுன் கிருஷ்ணன் என்ற புகைப்படக் கலைஞர், கோயில் திருவிழாவில் சிறுமி கிஷ்பு, பலூன் விற்பனை செய்துகொண்டிருப்பதை புகைப்படம் எடுத்துள்ளார். அப்புகைப்படங்களை பார்த்த அர்ஜுன் கிருஷ்ணன் மேலும் ஆர்வம் அடைந்தார். இதனையடுத்து, கிஷ்புவை ஆடை, அணிகலன்கள் அணியச் செய்து புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடரந்து, விளம்பர மாடல் வாய்ப்புகள் அவரைத் தேடி வர ஆரமித்துள்ளன. இதனால் இணையத்தில் அவரது புகைப்படங்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது. தற்போது அந்த சிறுமியை தங்கள் விளம்பரங்களில் நடிக்கவைக்க பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போடுவதாக கூறப்படுகிறது. இந்த புகைப்பட கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன்-க்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு, கேரளத்தைச் சேர்ந்த 60 வயது கூலித் தொழிலாளியின் புகைப்படம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவரும், விளம்பர மாடலாக மாறினார். இதேபோன்று தெருவோரம் பாட்டுப் பாடி பாதாம் விற்றுக்கொண்டிருந்த பூபன் பத்யாக்கர் சினிமாவில் பாடகராகவும் இணையத்தில் அவர் வைரலானதே காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

old

newstm.in

Next Story
Share it