Theme Check

அடுத்த வாரம் முதல் பீர் விலை உயர்வு?

அடுத்த வாரம் முதல் பீர் விலை உயர்வு?

அடுத்த வாரம் முதல் பீர் விலை உயர்வு?
X

கர்நாடகத்தில் பீர் நிறுவனங்களின் கோரிக்கையடுத்து வரும் 15ஆம் தேதி முதல் பீர் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

கோடை வெயில் தொடங்கிய நிலையில் பலரும் குளீங் பீர் வேண்டும் என ஆர்வமுடன் இருப்பர். இதனால் கோடையில் மதுபானங்கள் விற்பனை குறைவாகவும், பீர்களின் விற்பனை அதிகமாகவும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கர்நாடகத்தில் பட்ஜெட்டில் வரி உயர்வு விதிக்கப்படாததால் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது என்று அம்மாநில கலால்துறை அமைச்சச் கோபாலய்யா தெரிவித்திருந்தார்.

goa beer

ஆனால் சமீபமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மதுபானங்களை கொண்டு செல்வதற்காக ஆகும் செலவு அதிகரித்துள்ளது. மேலும் பீர் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பதால் பீர் விலையை உயர்த்த, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக பீர் விலையை மட்டும் உயர்த்த பீர் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் டீசல், பிற பொருட்களின் விலை உயர்வு காரணமாக பீர் விலையை உயர்வை சுட்டிக்காட்டி, கலால்துறைக்கு, பீர் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து மனுவையும் கொடுத்துள்ளனர். பீர் விலையை உயர்த்துவது குறித்து கலால்துறையும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

goa beer

இந்த நிலையில், பீர் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று விலையை உயர்த்த கலால் துறை சம்மதித்தால், ஒரு பாட்டீல் பீர் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்த பீர் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. கலால்துறை அனுமதி வழங்கியதும், வருகிற 15ஆம் தேதியில் இருந்தே விலை உயர்வை அமலுக்கு கொண்டு வந்து பீரை விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

newstm.in

Tags:
Next Story
Share it