Theme Check

பிச்சையில் புரட்சி : “போன் பே” மூலம் பிச்சை!!

பிச்சையில் புரட்சி : “போன் பே” மூலம் பிச்சை!!

பிச்சையில் புரட்சி : “போன் பே” மூலம் பிச்சை!!
X

பீகாரில் பிச்சைக்காரர் ஒருவர் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுத்து நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளார்.

சம்பரன் மாவட்டத்தில் ராஜூ படேல் என்பவர் கடந்த பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போதைய டிஜிட்டல் உலகில் யாரும் பர்ஸில் பணம் வைத்திருக்கவில்லை என்றும் செல்போன் மூலமும் பரிவர்த்தனை செய்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டார்.

இதனை அடுத்து அவர் தனக்கென ஒரு க்யூஆர் கோட் அடங்கிய அட்டையை தயார் செய்து அதை கழுத்தில் அணிந்து கொண்டு பிச்சை எடுக்கிறார். இவரது செயல் அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.

bihar 1

தற்போது இவருக்கு செல்போன் மூலம் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பலர் பணத்தை பிச்சை போடுகின்றனர். சூழலுக்கு தக்கவாறு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களை டிஜிட்டலுக்கு மாற்றிக் கொண்ட நிலையில் பிச்சைக்காரனான இவரும் தன்னுடைய பிச்சைக்கார தொழிலுக்கு டிஜிட்டல் முறையில் க்யூஆர் கோட் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை சிலர் ஆச்சர்யமாக பார்த்தாலும் கூட ஒரு தரப்பினர் பிச்சை எடுப்பதை ஊக்குவிக்கக்கூடாது என்ற ரீதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it