ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்குள் நுழைந்தது பெலாரஸ் படைகள்
ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்குள் நுழைந்தது பெலாரஸ் படைகள்

ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
உலகில் பெரிய நாடுகளில் ஒன்றான ரஷ்யா, தனது எல்லையில் உள்ள உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து 6ஆவது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா இடைவெளியின்றி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யா.
இந்நிலையில், உக்ரைனின் வடக்கு பகுதி வழியாக பெலாரஸ் படைகள் நுழைந்துள்ளதாக உக்ரைன் நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தது. அத்துடன், ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தையும் பெலாரஸ் எல்லை பகுதியில்தான் நடைபெற்றது.
ஏற்கனவே, உக்ரைன் தனது நாட்டில் இளைஞர்கள் கண்டிப்பாக போரில் பங்கேற்க வேண்டும் என கூறி, ஆயுதங்களை வழங்கி வருகிறது. மேலும் சிறை கைதிகளையும் விடுதலை செய்து ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட வைத்துள்ளது. எனினும் உக்ரைனால் தாக்குபிடிக்க முடியவில்லை இந்த நிலையில், தற்போது பெலாரஸ் படையும் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்குள் புகுந்துள்ளதால் போர் தீவிரமடைந்துள்ளது.
newstm.in