ஜிபே எண்ணை வைத்து நண்பருக்கு நம்பிக்கை துரோகம்!!

ஜிபே எண்ணை வைத்து நண்பருக்கு நம்பிக்கை துரோகம்!!

ஜிபே எண்ணை வைத்து நண்பருக்கு நம்பிக்கை துரோகம்!!
X

நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சியை சேர்ந்த கணேச கண்ணன் மற்றும் அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த சரவணன் இருவரும் நீண்ட நாள் நண்பர்கள். சரவணன் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

அவரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கணேச கண்ணனிடம் ரூ.10 லட்சம் வங்கியில் கடன் பெற்று தருமாறு கேட்டுள்ளார். இதற்கு கணேச கண்ணன் மறுத்த நிலையில், இது தொடர்பாக கணேச கண்ணன் மேல் சரவணன் கோவத்தில் இருந்துள்ளார்.

இதன்பின்னர் ஒருநாள் கணேசகண்ணன், சரவணனிடம் தனது செல்லை கொடுத்து ரீசார்ஜ் செய்யும்படி கூறியுள்ளார். அப்போது கணேசகண்ணனின் மொபைல் மூலம், வங்கி எண், வங்கி விபரம் போன்றவற்றை சரவணன் அறிந்துள்ளார்.

knk

பின்னர் அவரின் எண்ணை செயல் இழக்க செய்து அதே எண்ணில் சிம் ஒன்றை வாங்கி அதில் ஜிபே மூலம் கணேசகண்ணனின் வங்கி கணக்கை தனது மொபைலில் இணைத்துள்ளார். வங்கி கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்தை கடன் வாங்கியவர்களுக்கு ஜிபே மூலம் அனுப்பினார்.

தனது வங்கிகணக்கில் இருந்து பணம் அடுத்தவர் கணக்குக்கு அனுப்பப்படுவதை அறிந்த கணேச கண்ணன் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில் கணேசகண்ணனை அவரின் நண்பரே ஏமாற்றியது தெரியவந்தது.

பின்னர், சரவணனிடமிருந்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் பணத்தை மீட்டு கணேச கண்ணனிடம் ஒப்படைத்த போலீஸார் சரவணனை கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it