பெரும் அதிர்ச்சி.. பிரபல கிராமிய பாடகி கடத்தி பாலியல் வன்கொடுமை !!
பெரும் அதிர்ச்சி.. பிரபல கிராமிய பாடகி கடத்தி பாலியல் வன்கொடுமை !!

தக்ஷிந்தரி பகுதியை சேர்ந்த கிராமிய பாடகி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தா மாவட்டத்தில் கிராமிய பாடகி கடந்த 12ஆம் தேதி நண்பகல் தனது வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு பொருள் வாங்க சென்றுள்ளார். அப்போது, திடீரென மழை பெய்ததால் அருகில் உள்ள ஒரு ஓலைகொட்டகைக்குள் ஒதுங்கி நின்றுள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ரிக்ஷா ஓட்டுநர், அந்த பெண்ணை அருகில் இருந்த மறைவான பகுதிக்கு இழுத்து சென்றுள்ளான். அங்கு கிராமிய பாடகியை ரிக்ஷா ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர், பாடகி அணிந்திருந்த தங்க நகைகள், பணத்தையும் பறித்துவிட்டு வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினான்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கிராமிய பாடகி 2 நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர், உடல் நலம் சற்று முன்னேறிய பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கிராமிய பாடகியை பாலியல் வன்கொடுமை செய்த ரிக்ஷா ஓட்டுநரை அதிரடியாக கைது செய்தனர். மருத்துவபரிசோதனையில் கிராமிய பாடகி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பெரும் கண்டனம் எழுந்துள்ளது. இதுபோன்ற கொடூரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
newstm.in

