Theme Check

பைக் ரேஸ் சாகசம் – இளைஞர்கள் 3 பேர் கைது!!

பைக் ரேஸ் சாகசம் – இளைஞர்கள் 3 பேர் கைது!!

பைக் ரேஸ் சாகசம் – இளைஞர்கள் 3 பேர் கைது!!
X

பல நாட்களாக பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களால் பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து தென்காசி காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி தென்காசி சுந்தரபாண்டியபுரம் சாலையில் கீழப்புலியூர் குளத்து கரை அருகில் பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை போலீசார் சுற்றிவளைத்து விசாரணை மேற்கொண்டனர்.

race

அதில், தென்காசியைச் சேர்ந்த செய்யது சுலைமான் தாதாபீர் (21), சேக்மைதீன் (19), முகம்மது (21) ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்த போலீசார், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

காவல் உதவி ஆய்வாளர்கள் கபீர்தாசன், செல்வி, தனிப்பிரிவு தலைமை காவலர் முத்துராஜ், காவலர்கள் சதாம் உசேன், சௌந்தர்ராஜன், உள்ளிட்டோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it