Theme Check

இருமொழி ஏமாற்று வேலை.. மும்மொழி மோசடி வேலை.. சீமான் பேச்சு..!

இருமொழி ஏமாற்று வேலை.. மும்மொழி மோசடி வேலை.. சீமான் பேச்சு..!

இருமொழி ஏமாற்று வேலை.. மும்மொழி மோசடி வேலை.. சீமான் பேச்சு..!
X

“இருமொழி கொள்கை என்பது ஏமாற்று வேலை; மும்மொழி கொள்கை என்பது மோசடி வேலை” என்று, இளையான்குடியில் பேசிய சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இளையான்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இலங்கையில் ராஜபக்சே ஆட்சி மாறி ரணில் விக்ரமசிங்கே ஆட்சி வந்தாலும் அங்குள்ள பொருளாதார சிக்கல் தீராது.

முதல்வர் ஸ்டாலின் ஈழத்தமிழர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், அவர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கியூ பிராஞ்சையும், சிறப்பு முகாமையும் கலைக்க வேண்டும். இவை இரண்டையும் கலைக்காமல் ஈழத் தமிழர்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும்..?

பத்து ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஒரே ஆண்டில் செய்துள்ளோம் என திமுக கூறுகிறது. ஆம், பத்து ஆண்டுகளில் ஊழல், லஞ்சமாக பெற்று சேர்க்க வேண்டியவற்றை ஒரே ஆண்டில் சேர்த்துவிட்டனர். இன்னும் 50 ஆண்டில் சேர்க்க வேண்டியதை அடுத்த நான்கே ஆண்டில் சேர்த்து விடுவார்கள்.

இருமொழி கொள்கை என்பது ஏமாற்று வேலை. மும்மொழி கொள்கை என்பது மோசடி வேலை. பாஜக அரசு தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்தியதை பேசுகிறது. தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைகளாக கூறுகின்றனர்” என்றார்.

Next Story
Share it