Theme Check

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் பில் கேட்ஸ்.. பூஸ்டர் டோசும் செலுத்தினார் !!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் பில் கேட்ஸ்.. பூஸ்டர் டோசும் செலுத்தினார் !!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் பில் கேட்ஸ்.. பூஸ்டர் டோசும் செலுத்தினார் !!
X

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமானவர் பில் கேட்ஸ். இவர் கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பேசி வருகிறார். குறிப்பாக தடுப்பூசிகள் மற்றும் ஏழை நாடுகளுக்கான கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அவர் தனது வெளியிட்ட ட்விட்டர் பதிவில், லேசான காய்ச்சல் அறிகுறியுடன் உள்ள எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி என் உடல்நிலை தேறும் வரை என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன், என்று பதிவிட்டுள்ளார்.

bill gates

பில்கேட்ஸ் ஏற்கனவே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியுடன் பூஸ்டர் டோசும் செலுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பில் கேட்ஸ் அளித்த பேட்டி ஒன்றில், கொரோனா நெருக்கடி இன்னும் முடிவடையவில்லை என்றும் உலகம் மற்றொரு தொற்றுநோய் அபாயத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.



newstm.in

Tags:
Next Story
Share it