‘கருப்பு திராவிடன்’ யுவன் சங்கர் ராஜா உண்டாக்கிய திடீர் பரபரப்பு
‘கருப்பு திராவிடன்’ யுவன் சங்கர் ராஜா உண்டாக்கிய திடீர் பரபரப்பு

இளையராஜாவின் கருத்து சமீபத்தில் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில் யுவன் சர்கர் ராஜாவின் பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பீட்டு எழுதிய கருத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதேநேரத்தில் இளையராஜா கருத்துக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்தனர். இதற்காக இணையதளங்களிலும் பெரிய கருத்து மோதல் நடந்து வருகின்றன. மோடி பற்றி எழுதிய என் கருத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று இளையராஜா கூறியதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்தார்.

முகநூலில் இளையராஜாவுக்கு எம்.பி.பதவி கிடைக்கப்போகிறது என்றும் அதனால்தான் அவர் இப்படி புகழ்ந்து எழுதியிருக்கிறார் என்றும் எழுதி வருகிறார்கள். இந்த நிலையில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ‘கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்’ என்று பதிவிட்டிருக்கிறார். அவரின் இந்தப் பதிவு இப்போது பரபரப்பாகி இருக்கிறது.
இளையராஜாவின் கருத்து சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில் அவரது மகனும் இசையமைப்பாளருமான யுவன் சர்கர் ராஜாவின் பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

