கண்ணை மறைத்த காதல்.. அப்பாவியை கொலை செய்து காதலிக்கு பரிசு !!
கண்ணை மறைத்த காதல்.. அப்பாவியை கொலை செய்து காதலிக்கு பரிசு !!

காதலியுடன் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு நகைக்காக மூதாட்டியை கொலை செய்து சிறைக்கு சென்றுள்ளார கல்லூரி மாணவரை ஒருவர்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பட்டத்தாள் (75) என்ற மூதாட்டி வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 6ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவர் கழுத்தில், கையில் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் மாயமாகியிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பட்டத்தாளின் மகள் பார்வதி போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். எப்படி விசாரணை நடத்தியும் குற்றவாளியை நெருங்கமுடியவில்லை.
இந்நிலையில், கொலை தொடர்பாக கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். வேப்பூர் தெற்கு தெருவைச் சேர்ந்த ‘சூர்யா ( 21) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பெரம்பலூர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்.சி., கம்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர், கடந்த 6ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த பட்டத்தாளிடம் நகைகளை பறிக்க முயன்றார். அப்போது பட்டத்தாள் தடுத்ததால் அவரது முகத்தை கையால் மூடி கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் நகைகளை திருடி சென்றுள்ளார்.
திருடிய நகைகளை வேப்பூரிலுள்ள அடகு கடைகளில் ரூ. 95 ஆயிரத்திற்கு அடகு வைத்தார். அதன் மூலம் சூர்யா தனது காதலிக்கு புதிய மொபைல் போன், துணிகளை வாங்கினார். தொடர்ந்து, திருச்சியிலுள்ள தனியார் விடுதியில் 5 மாதம் தங்குவதற்கு அட்வான்ஸ் தொகை செலுத்தி தங்கியது தெரிய வந்தது.
சூர்யா அடகு கடையில் நகையை அடகு வைத்தது சிசிடிவியில் பதிவானது. அதன்பேரில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் உறுதியாகின. இதனையடுத்து மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடிய சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

