கண்ணை மறைத்தது காமம்.. 2 பிள்ளைகளின் தாய் கள்ளக்காதலனுடன் தற்கொலை..!
கண்ணை மறைத்தது காமம்.. 2 பிள்ளைகளின் தாய் கள்ளக்காதலனுடன் தற்கொலை..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எம்.துரைச்சாமிபுரம் பாரப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன்; இவருடைய மனைவி ராமலட்சுமி (32). இந்தத் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், சிவகாசி அருகே மேலப்பாளையாபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் என்பவருக்கும் ராம லட்சுமிக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் காரணமாக, இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், ராம லட்சுமியும் பன்னீர் செல்வமும், மேலப்பாளையாபுரம் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதிகாலையில் அப்பகுதிக்கு சென்ற மக்கள் இறந்து கிடந்த இருவரையும் பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மாரனேரி போலீசார், இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

