இயக்குநர் பார்த்திபனுக்கு புளூ சட்டை மாறன் சரமாரி கேள்வி!!

இயக்குநர் பார்த்திபனுக்கு புளூ சட்டை மாறன் சரமாரி கேள்வி!!

இயக்குநர் பார்த்திபனுக்கு புளூ சட்டை மாறன் சரமாரி கேள்வி!!
X

இரவின் நிழல் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபனுக்கு சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இரவின் நிழல் படத்தை கடந்த வெள்ளியன்று வெளியிட்ட பார்த்திபன், அதனை உலகின் முதல் Non Linear single shot திரைப்படம் என்று கூறி வருகிறார். இதற்கு பிரபல சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

2013இல் வெளியான Fish & Cat படம்தான் உலகின் முதல் Non Linear Single shot திரைப்படம் என்று கூறினார். அதற்கு ஆதாரமாக Variety.com இணைய தளத்தின் விமர்சனத்தை தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். இரவின் நிழல் படம் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், புதுவையில் புளூ சட்டையின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இதை பார்த்திபன் ரசிகர்கள் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பார்த்திபனுக்கு 14 கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலுக்கு காத்திருப்பதாக புளூ சட்ட மாறன் கூறியுள்ளார்.


newstm.in

Next Story
Share it