கங்கையில் மிதந்த உடல்கள்.. எங்களிடம் கணக்கு இல்லை.. மத்திய அரசு கைவிரிப்பு..!
கங்கையில் மிதந்த உடல்கள்.. எங்களிடம் கணக்கு இல்லை.. மத்திய அரசு கைவிரிப்பு..!

கொரோனாவால் பலியாகி கங்கையில் மிதந்த உடல்களின் எண்ணிக்கை அரசிடம் இல்லை என, மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின்போது, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓடும் கங்கை ஆற்றின் கரையோரங்களில் கொரோனாவால் பலியானோரின் உடல்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் மிதந்து கொண்டிருந்தன. அந்த புகைப்படங்கள் நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை எழுப்பியது.
இந்நிலையில், ஜனவரி 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், “கொரோனா காலத்தில் கங்கை கரையில் புதைக்கப்பட்ட மற்றும் ஆற்றில் மிதந்த உடல்களின் எண்ணிக்கை என்ன.?” என்று, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பிஸ்வேஷ்வர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், “கொரோனாவால் பலியாகி கங்கை கரையில் புதைக்கப்பட்ட உடல்கள் குறித்த தகவல் அரசிடம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

