முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு.. மர்ம நபருக்கு போலீஸ் வலை..!
முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு.. மர்ம நபருக்கு போலீஸ் வலை..!

சென்னையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் ஒருவர், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு மற்றும் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு போன்ற இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

