திமுக பிரமுகா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு- பரபரப்பு வீடியோ !
திமுக பிரமுகா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு- பரபரப்பு வீடியோ !

பட்டப்பகலில் திமுக பிரமுகர் வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டை வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகா் அழகா்சாமி கோவில் தெருவைச் சோ்ந்தவா் பிராங்க்ளின் (59). பொதுப் பணித் துறை கட்டட ஒப்பந்ததாரரான இவர், 6 மாதங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து பிரிந்து திமுகவில் இணைந்தாா்.
இந்நிலையில், நேற்று மாலை பிராங்க்ளின் வெளியே சென்றுள்ளார். அவரது வீட்டில் மனைவி குளோதினி, பேரன், பேத்திகள் மட்டும் உள்ளே இருந்துள்ளனர்.

அப்போது, அழகர்சாமி வீதி வழியாக நடந்து வந்த இளைஞர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை பிராங்க்ளின் வீட்டில் வீசினார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது புகை மூட்டமாக இருந்தது. வெடிகுண்டு வீசிய இளைஞர் சாவகாசமாக பொறுமையாக நடந்து சென்று அழகர்சாமி சந்திப்பில் பைக்குடுன் காத்திருந்த மற்றொரு இளைஞருடன் தப்பிச்சென்றார்.
எனினும் இதில் வீட்டிலிருந்தவா்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் வீட்டில் பொருப்பத்தப்பட்டிருந்த சிசிடியை ஆய்வு செய்த போது வீட்டின் அருகே மர்ம நபர்கள் ஒருவர் கையில் நாட்டு வெடிகுண்டை எடுத்து வந்து வீசிவிட்டு சென்றதும் பதிவாகி இருந்தது.

தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி, முன்னாள் எம்எல்ஏ ஆ.அன்பழகன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டனா். மேலும் சிசிடிவி காட்சியை கொண்டு நாட்டு வெடிகுண்டு வீசி தப்பி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரி நேத்தாஜி நகர் திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பி சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலிசார் விசாரணை pic.twitter.com/DjIr9kvkpK
— Jennifer (@jenniifer_off) February 11, 2022
newstm.in

