Theme Check

+2 வகுப்பு பொதுதேர்வில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள்!!

+2 வகுப்பு பொதுதேர்வில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள்!!

+2 வகுப்பு பொதுதேர்வில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள்!!
X

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எந்தவித நேரடித் தேர்வு நடைபெறாத நிலையில், கடந்த மே 5-ம் தேதி 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. மாணவர்களின் மனஉளைச்சலை போக்கும் விதமாக வேதியியல், உயிரியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு இடையே 3 நாட்கள் இடைவெளி வழங்கப்பட்டிருந்தது.

exam

கடந்த 28-ம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வில் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பள்ளி மாணாவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு வேதியியல் வினாத்தாளில் சில குளறுபடிகள் இருந்ததாக வந்த புகாரை அடுத்து, கூடுதல் மதிப்பெண்கள் வழங்க தேர்வுகள் இயக்ககம் முடிவெடுத்துள்ளது.

Circular

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வேதியியல் பாட வினாத்தாளில், “பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5-ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண்கள் மற்றும் பகுதி 2-ல் கேள்வி எண் 29-ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். மாணவர்கள் மேற்கொண்ட வினாவிற்கான விடையினை எழுத முயற்சி செய்திருப்பின் அதற்கான முழுமையான மதிப்பெண் வழங்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story
Share it